திருமண பொருத்தம்

இந்திய வேத ஜோதிடத்தின் படி

சிறப்பான துணை யார் என்பதை அறிய திருமண பொருத்தங்கள் நம் முன்னோர்களால் ஏற்படுத்த பட்டன .

திருமணம் என்பது ஒரு மனப்பூர்மாக மணமகனையும் , மணமகளையும் இணைக்கிறது. திருமணம் இந்தியாவில் இந்துக்களின் புனித தினமாக கருத்தப்படுகிறது.பொதுவாக நம் நாட்டில் திருமனம் செய்துகொள்ள போகின்ற ஆனின் ஜாதகத்தையும், பெண்ணின் ஜாதகத்தையும் பொருத்தீப் பார்த்து பின் நம் பாரம்பரிய முறைப்படியான தசவிதப் பொருத்தங்கள் உண்டு என்ற பின்னே கல்யாணம் நிச்சயம் செய்கிறோம்.சிறப்பான திருமண வாழ்க்கை பெற அவர்கள் தனக்கு ஏற்ற துணையைமணக்க வேண்டும். சிறப்பான துணை யார் என்பதை அறிய திருமண பொருத்தங்கள் நம் முன்னோர்களால் ஏற்படுத்த பட்டன . பண்டைய இந்திய முனிவர்களுக்கு மற்றும் புனிதர்கள் 'திருமண பொருத்தம்', 'ஜாதக பொருத்தம்' அல்லது '10 பொருத்தம்' என்று அழைக்கப்படும் திருமணம் ஒத்துப்போகும் அல்லது திருமண பொருந்தக்கூடிய ஒரு முறை திட்டமிட்டனர்.திருமண பொருத்தத்தில் மிக முக்கிய பொருத்தம் என்பது ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டது.எத்தனனயோ பொருத்தங்கள் இருப்பினும் (மொத்தம் இருபது பொருத்தங்கள் உள்ளன) . இதில் 10 பொருத்தங்கள் மட்டுமே நிலையானதாக கருதப்படுகிறது. மேலும் இந்தியாவின் சில பகுதிகளில் 8 பொருத்தங்கள் மட்டும் கணக்கிடப்படுகிறது.இதுவே தமிழில் 10 பொருத்தம் என்று அழைக்கப்படுகிறது


இப்பொழுது பொருத்தங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் சற்று விரிவாகக் காண்போம்.

நட்சத்திர அல்லது தின பொருத்தம் என்பது தம்பதியரின் ஆயுள் ஆரோக்கியத்தை குறிக்கின்றது. வாழ்க்கையின் சிறந்த தருணங்களை வாழ நல்ல ஆரோக்கியமும் செல்வமும் இருப்பது அவசியம்.

இது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் ராசி பொருத்தத்தை குறிக்கின்றது. இரண்டு ராசியும் பொருந்தி இருந்தால் இருவரிடையே இணக்கத்தன்மை சிறப்பாக இருக்கும். மேலும் இந்தப் பொருத்தம் வம்ச விருத்தியை குறிக்கின்றது.

இது கணவன் மனைவி இருவரின் மனப் பொருத்ததைக் குறிக்கும். கணம் மூன்று வகைப்படும். தேவகனம் – நல்ல மற்றும் அன்பு நிறைந்த குணம் ; மனுஷ கணம் – நல்ல மற்றும் தீய குணம் ; ராக்ஷஸ கணம் – முரட்டுத்தனமான கடின குணம்

இது தாம்பத்திய உறவை காட்டுகின்றது. இந்த பொருத்தம் பொருந்தாவிடில் திருமணம் செய்வது கூடாது.

பாரம்பரிய இந்தியப் பெண்கள் தனது கணவனின் நீண்ட ஆயுளையே பெரும் பாக்கியமாக கருதினார்கள். ரஜ்ஜு என்பது சுமங்கலி பாக்கியத்தை குறிக்கின்றது. ஒரு ஆண் மற்றும் பெண் ஒரே ரஜ்ஜுவில் இல்லாமல் இருப்பதே ரஜ்ஜுப் பொருத்தம் எனப்படும். மற்ற அனைத்து பொருத்தங்கள் இருந்தாலும் ரஜ்ஜுப் பொருத்தம் இல்லாவிடில் திருமணம் செய்தல் கூடாது.

இது ஒரு பெண் மற்றும் ஆணின் நட்சத்திரம் மற்றும் அவற்றின் அதிபதிகளின் நிலையை காட்டும். பெண் மற்றும் ஆணின் ராசி அதிபதிகள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகமாகவோ அல்லது சம கிரகமாகவோ இருந்தால் பொருந்தும். இல்லாவிடில் திருமண பந்தம் நீடித்திருக்காது.

இது செல்வம். குழந்தை நீண்ட ஆயுள் மற்றும் நல் வாழ்வைக் குறிக்கின்றது. இது மிகவும் முக்கியமான பொருத்தம் ஆகும். தின மற்றும் ராசி பொருத்தம் இல்லாவிட்டாலும் கூட மாஹேந்திர பொருத்தம் இருந்துவிட்டால் பொருத்தம் இருப்பதாகக் கருதலாம்.

ஒரு பெண்ணின் ஆயுளைப் பற்றியும் அவள் வாழ்க்கை தீர்க்க சுமங்கலியாக முடியுமா என்பதைக் குறிக்கும் பொருத்தமே ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம். இது திருமணத்தின் பின்னர் ஒரு பெண்ணின் கணவரின் செழிப்பு மற்றும் நல்வாழ்வை குறிக்கும் ஒரு குறிகாட்டி எனவும் எடுத்துக்கொள்ளலாம்

இந்தப் பொருத்தம் இருந்தால் தம்பதிகளிடையே நல்லிணக்கம், அன்பு அனுசரனை மற்றும் ஒற்றுமை நிலவும்.

வேதைப் பொருத்தம் என்றால் தீங்கு அல்லது துக்கம். இந்தப் பொருத்தம் இல்லை என்றால் அன்பும் அனுசரணையும் இருக்காது. தம்பதிகளின் அன்யோன்யம் பாதிக்கப்படும்.இந்தப் பொருத்தம் இருந்தால் திருமண வாழ்க்கையின் பல்வேறு துயரங்களை துடைக்க முடியும்